Pages

Thursday, April 15, 2010

For Ambedkar Jayanthi: Passages from the Tamil translation of 'Turning the Pot, Tilling the Land'

To mark Ambedkar Jayanthi, here are some excerpts from
Paanai Seivom Payir Seivom: nam kaalathil uzhaippin madippu   
by
Kancha Iliah
translated from English by Aruna Rathnam
art Durgabai Vyam
This Tamil edition of Kancha Iliah’s seminal work, Turning the Pot, Tilling the Land: Dignity of labour in our times (Navayana Publishing) has been translated in the engaging and informative spirit of the original by educationist Aruna Rathnam and marks a milestone in Tamil publishing for children. 
Children’s books the world over tend to shy away from tackling troubling issues such as caste, race and class. Professor Iliah not only breaks this ‘taboo’ but uses a creative and analytical approach to get young people to rethink disdain for manual labour.
He throws light on the social, economic and historic aspects of the lives of adivasis, cattle-rearers, leatherworkers, potters, farmers, weavers, dhobis and barbers, and takes readers through the science and art of their skills so they understand the value of the work done by these communities considered ‘backward’.
Bhopal-based artist Durgabai Vyam's stunning folk-style illustrations speak visually for the dignity of labour.
மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் நிர்வாக இயல் கல்லூரிகளிலும் படித்துக்கொண்டிருந்த வசதிமிக்க, உயர்சாதி மாணவர்கள் இடஒதுக்கீட்டை ஏதிர்த்து தர்னாக்களில் ஈடிபட்டனர். ஊர்வலங்கள் நடத்தினர். இது பிரச்சனையாக படவில்லை.
ஆனால் எதிர்ப்பு என்ற பெயரில் தெருக்களைக் கூட்டுவது, காலணிகளை மெருகிடவது, காய்கறி விற்பது போன்றவற்றைச் செய்தனர்...[இதை] செய்வது போல் காட்டினார்களே தவிர அத்தொழில் செய்வோருடைய உழைப்பை மதித்து அவற்றை செய்யவில்லை.
இவ்வேலைகளை தாமும் செய்யவேண்டிய ஒரு காலகட்டம் வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் இவை செய்யப்பட்டன என்றே எனக்குத் தோன்றியது. இவ்வேலைகளை அவர்கள் இளக்காரமாக நினைத்தார்கள்.

- Preface

"அறிவியல் என்பது மறுபடி மறுபடி செய்து சரி பார்த்து நிரூபிக்கக்கூடிய வழிமுறைகளால் உண்டாகும் அறிவையும் திறன்களையும் கொண்டது. அதாவது உற்று நோக்கல், கண்டு அறிதல், விவரங்கள் சேகரித்தல், பரிசோதனை முயற்சிகள், அதனால் வரும் பட்டறிவு மற்றும் இவ்வழிகளில் பெறப்பட்ட அறிவினால் இயற்கையின் அம்சங்களை விளக்குதல் போன்ற சீரிய நெறிமுறைகளை கொண்டது. 
இத்தகைய அறிவியலை மடிகர்களும், அருந்ததியரும் சாமர்களும் பயின்று வளர்த்தனர். அவர்களது அறிவியல் சாதனைகளால் சமூகத்தினர் அனைவருக்கும் நன்மை கிடைத்தது. வேதங்களில் காணப்படும் மந்திரங்களும் பாடல்களும் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களையே பேசின. அவை அறிவியல் அல்ல. அவற்றால் எந்த உற்பத்தி பயனும் இல்லை. அனால் வேத சாத்திரங்கள் தோல் தொழிலில் ஈடுபட்டவர்களை 'தீண்டத்தகாதவர்கள்' என்றன. உலகில் மற்ற சமூதயங்களில் தோல் தொழில் செய்தவர்கள் திறன்மிகு கைவினைக் கலைஞர்களாகப் போற்றப்பட்டுச் சிறப்புடன் வாழ்ந்தனர். அவர்கள் எந்நாளும் தீண்டத்தகாதவர்களாக இகழப்படவில்லை."

"நிலத்தை உழுது பயிர் செய்பவரை கடவுள் அதிகமாக நேசிக்கிறார் என்று பல மதங்கள் நம்புகின்றன. உண்மையில் பெரும்பாலான சமூகங்களில் நிலத்தில் வேலை செய்பவர்கள் எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுக்கலாம். அவர்களது குழந்தைகள் வெவ்வேறு துறைகளில் வல்லுனர்கலாகலாம். உடல் உழைப்பை  மதிக்கும் சமுதாயங்களில் ஒரு மதகுரு விவசாயி ஆகலாம், ஒரு விவசாயி மதகுருவாகலாம். நம் நாட்டிலும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிகளில் தரமான கல்வி கிடைத்தால் அவர்களும் ஆசிரியர்களாக, பத்திரிக்கையாளர்களாக, தொழில் முனைவோராக, பொறியியல் வல்லுனர்களாக, படத் தயாரிப்பாளர்களாக, நிர்வாகிகளாக பல துறைகளில் சிறந்து விளங்க முடியும்."